ஈழத்தின் கருப்பு நாட்கள்
தமிழக வரலாற்றில் பொதுவான ஒரு விசாரிப்புக்காகபத்திரிகையாளர்கள் அதிகம் அணுகப்பட்ட காலகட்டம் என்று ஒன்றுஇருக்குமானால் அது 2009 மே 17 -ம் தேதி தொடங்கி 19- ம் தேதிவரையிலான மூன்று நாள்களாகவே இருக்கும். அதற்குப் பிறகும்கூடஇன்று வரை அந்த விசாரிப்பு முடிந்தபாடில்லை. இனியும்முடியப்போவதாகத் தெரியவில்லை: "தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்இருக்கிறாரா ; இறந்துவிட்டாரா?"
மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் எனக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவிசாரிப்புகள் வந்தன. அந்த விசாரிப்புகளையும் அப்போதிருந்தமனநிலையையும் விவரிப்பது எப்படி என்று தெரியவில்லை. ஆனால்,அந்த விசாரிப்புகள் பரபரப்பான ஒரு விஷயத்தில் மேலதிகதகவல்களைத் தெரிந்துகொள்ள பத்திரிகையாளர்களைத்தொடர்புகொள்ளும் வழமையான வெற்று ஆர்வத்தின் வெளிப்பாடுகள்அல்ல என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு வாசகர் என்னிடம் கேட்டார்: "எந்த அடிப்படையில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?" இப்படிக் கேட்டுவிட்டு பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்களை அவர் என்னிடம் விவரித்தார். தொடர்ந்து பதற்றத்துடன் அவர் பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு எப்படி பதில் சொல்வதென்று அந்தக் கணம் எனக்குத் தெரியவில்லை. இறுதியாக நான் அவரிடம் இப்படிச் சொன்னேன்: "சார், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று நம்பஎவ்வளவு வாதங்கள் இருக்கின்றனவோ அதே அளவுக்கு இணையானவாதங்கள் அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவதற்கும்இருக்கின்றன. உண்மைதான். நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எந்த ஓர் வாதமும் பிரபாகரனுக்கு இனி பெருமை சேர்க்க இயலாது என்பது அதைவிட உண்மை. உங்களுடைய பேச்சின் மூலம் நீங்கள் தமிழீழ ஆதரவாளர் என்று நான் உணர்கிறேன். ஈழத் தமிழர்கள் மீதுஉண்மையான அக்கறை உடையவர்கள் முதலில் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான்..." தொலைபேசியை அவர் துண்டித்தார். பிரபாகரன்பற்றி புதிதாக ஏதேனும் தகவல்கள் வந்திருக்கிறதா என்று இணையத்தை மேயத் தொடங்கினேன். இறுதிக் கணங்களில் பிரபாகரனின் முன் என்னென்னத் தெரிவுகள் இருந்திருக்கும்? எப்படியான முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்ற எண்ணங்கள் வந்துபோன வண்ணம் இருந்தன. பிரபாகரனின் முன்ஏராளமானத் தெரிவுகள் இருந்தன. அவர் நினைத்திருந்தால் ஈழத் தமிழர்கள் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம். அவருடைய முடிவுக்காக சர்வதேசங்களும் காத்திருந்தன; இப்போதல்ல. 2002 -ல். என் நினைவுகள் மெல்ல அந்த நாள்களை நோக்கிச் செல்கின்றன...

No comments:
Post a Comment