Monday, August 17, 2009

ஒரு விபத்து நடந்துகொண்டிருக்கிறது
இப்போதுதான் சற்று முன்பு
ஒரு பள்ளிக்கூடம் தீப்பற்றிக்கொண்டது
தீ சூழ்ந்திருக்கிறது
குழந்தைகள் கருகுகிறார்கள்
வாசல் அடைப்பட்டிருக்கிறது
சரி என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் எல்லாம்
ஆசிரியர்கள் தப்பியோடுகிறார்கள் வேகமாக
பெற்றோர் அலறி வருகிறார்கள் வேகமாக
ஊடகங்கள் செய்தி பரப்புகின்றன வேகமாக
பிரதமர் இரங்கல் தெரிவிக்கிறார் வேகமாக
அதிகாரிகள் காரணம் ஆராய்கிறார்கள் வேகமாக
அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகிறார்கள் வேகமாக
மதகுருமார்கள் தெய்வக்குற்றம் காண்கிறார்கள் வேகமாக
மக்கள் பரபரப்பாகிறார்கள் வேகமாக
நான் கவிதை எழுதுகிறேன் வேகமாக
நீங்கள் கவிதை படிக்கிறீர்கள் வேகமாக

No comments:

Post a Comment